வாஷிங்டன்

மெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் சகோதரி மகளான மீனா ஹாரிஸ் விவசாய போராட்டத்தையொட்டி இந்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கத் துணை அதிபராக இந்திய வம்சாவளியினரான கமலா ஹாரிஸ் பதவி ஏற்றுள்ளார்.   அவருடைய சகோதரி மகளான மீனா ஹாரிஸ் ஒரு சமூக ஆர்வலர் ஆவார்.  அவருடைய சமீபத்தைய டிவிட்டர் பதிவு பலராலும் வரவேற்கப்பட்டுள்ளது.  அந்த பதிவுத் தொடர் குறித்து இங்கே காண்போம்.

அவர் தனது டிவிட்டரில், “அலெக்சாண்டிரியா ஒக்காசியா என்னும் குடியரசு கட்சியைச் சேர்ந்த அலெக்சாண்டிரியா தலைநகர கலவரத்தில் தாம் அனுபவித்த அதிர்ச்சி குறித்துப் பேசியமைக்கு நான் நன்றியைத் தெரிவிக்கிறேன்.  அதே நேரத்தில் நான் அவரிடம் கோபமாக உள்ளேன்.  காரணம் இதற்காக யாரும் கட்சியில் இருந்து  வெளியேற்றப்படவில்லை என்பது அவமானகரமானது மற்றும் வெட்கக்கேடானது.

உலகின் பழமையான ஒரு ஜனநாயகம் சுமார் ஒரு மாதத்துக்கும் குறைவான நாட்கள் முன்பு தாக்கப்பட்டுள்ளது.  இது தற்செயல் நிகழ்வு அல்ல.   நமது நாட்டைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கும் போது அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது.  இந்திய விவசாயிகளுக்கு எதிராகத் துணை ராணுவம் நடத்தும் வன்முறை, இணையச் சேவை நிறுத்தம் போன்றவற்றுக்கு நாம் அனைவருமே கோபம் அடைய வேண்டும்

அலெக்ஸாண்டிரியா உள்ளிட்டோர் தலைநகர கலவரம் கண்டு கோபம் அடைவதைப் போல் நாம் இந்த நிகழ்வுகளைக் கண்டு கோபம் அடைகிறோம்.  இதற்குக் காரணம் பாசிசம் ஜனநாயகத்தை அச்சுறுத்துவது மட்டும் இல்லை.  அதே வேளை ஜனநாயகம் அச்சுறுத்தப்படுகிறது என்பதும் உண்மையாகும்.  டிரம்ப் பதவியை விட்டு வெளியேறிய பிறகும் அந்த அலை மேலும் உயர்ந்து வருகிறது.

இந்தியா  அல்லது அமெரிக்க அரசியலில் போர்க்குணம் கொண்ட தேசிய வாதம் என்பது மிகவும் அபாயமான சக்தி கொண்டது.  பாசிச சர்வாதிகாரிகள் எங்கும் செல்லவில்லை என்பதை மக்கள் உணர்ந்தால் மட்டுமே அதை நிறுத்த முடியும்.  ஒற்றுமை என்பது உண்மையுடன் தொடங்குகிறது.  ஒரு பொறுப்பு இல்லாமல் எதையும் குணப்படுத்த முடியாது. வெளிப்படையாக இருந்து எதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்” எனப் பதிந்துள்ளார்