சென்னை

ழை வெள்ளத்தில் திறந்திருந்த கால்வாயில் விழுந்து மருத்துவரும் மகளும் மரணம் அடைந்ததற்கு கமலஹாசன் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.  இதனால் தெருவெங்கிலும் மழை நீர் பெருக்கெடுத்துப் பல இடங்களில் ஓடி வருகிறது.  மழை காரணமாகப் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டு தெருவிளக்குகள் எரிவதில்லை.   மழை நீர் கால்வாய்களும் எவ்வித எச்சரிக்கையும் இன்றி திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இதனால் மழையில் சென்ற மருத்துவர் கரோலின் பிரிசில்லா மற்றும் அவர் மகள் பிரிசில்லா ஆகியோர் மழை நீர் கால்வாயில் விழுந்து மரணம் அடைந்துள்ளனர்,  இந்த மரணம் தமிழகத்தையே பரபரப்பில் ஆழ்த்தி உள்ளது.  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பலரும் இவர்கள் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரபல நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமலஹாசன் தனது டிவிட்டரில், “மழைக்காலத்திற்கென திட்டமிட்டிருந்தால், ஆபத்தான கால்வாயென எச்சரிக்கை வைத்திருந்தால், சாலையில் விளக்கு எரிந்திருந்தால், மருத்துவர் கரோலின் பிரிசில்லாவையும் மகள் எல்வினையும் இழந்திருக்க மாட்டோம். கையாலாகாத அரசு எத்தனை உயிர்களைக் காவு வாங்குமோ?” எனப் பதிந்துள்ளார்.