சென்னை

மிழக அரசின் கடன் சுமை அதிகரிப்பு குறித்து கமலஹாசன் தனது டிவிட்டர் பதிவில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.  நிதி அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் இந்த அறிக்கையைத் தாக்கல் செய்தார்.  அப்போது அவர் ”2011-12 ஆம் ஆண்டின் வருவாய் பற்றாக்குறை ரூ.41,417.30 கோடியாக இருக்கும்.   மூலதன செலவினங்கள்:ள் 14.41% உயர வாய்ப்புள்ளது.  தற்போது தமிழக அரசின் கடன் சுமை ரூ.5.7 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது” எனத் தெரிவித்தார்.

கடன் சுமை கடுமையாக உயர்ந்ததற்காக அரசின் மீது எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் அரசைத் தனது டிவிட்டரில் பதிவுகளில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கமலஹாசன் தனது டிவிட்டரில்,

மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று – தமிழக அரசு வாங்கியிருக்கும் கடன்களைப் பற்றிய வெள்ளை அறிக்கை வேண்டும் என்பது. இப்போது அரசின் செய்திக் குறிப்பின்படியே,  ஒவ்வொரு தமிழனின் தலையிலும் 65,000 ரூபாய் கடன் சுமை இருக்கிறது.

எதற்காகக் கடன் வாங்கினார்கள்? என்ன விதத்தில் செலவு செய்தார்கள்?  இத்தனை லட்சக்கணக்கான கோடிகளில் மக்களுக்கு ஓரிரு துளியேனும் சென்று சேர்ந்ததா? எதற்கேனும் கணக்கு உண்டா? தேர்தலுக்கு முன்னதாக இக்கடன்களைப் பற்றிய முழுமையான அறிக்கை வந்தே தீரவேண்டும்.

எனப் பதிந்துள்ளார்.