மருந்துக் கடைகளை விட மதுக்கடைகள் அதிகமுள்ள தமிழகம் : கமலஹாசன்

ருமபுரி

க்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் தமிழகத்தில் மருந்துக் கடைகளை விட அதிகம் மதுக்கடைகள் உள்ளதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் அரசு மதுக்கடைகளான டாஸ்மாக் கடைகள் படிபடியாக குறைக்கப்படும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன் பிறகு ஒரு சில கடைகள் மட்டுமே மூடப்பட்டன. உச்சநீதிமன்ற் உத்தரவுக்கிணங்க நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டன.

ஆனால் சில தினங்களுக்குள்ளாகவே நெடுஞ்சாலைகள் பெயரில் மாற்றம் செய்து மீண்டும் அக்கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் மதுக்கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை இதற்கு பல எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன.

இன்று பிரபல நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் தருமபுரியில், “மக்கள் நீதி மய்யம் மது ஒழிப்பைக் கோரவில்லை. மதுக் குறைப்பை கோருகிறது. தற்போது தமிழகத்தில் மருந்துக் கடைகளை விட மதுக்கடைகள் அதிகம் உள்ளன. தற்போது அர்சு செய்ய வேண்டியதை தனியாரும் தனியார் செய்ய வேண்டியதை அரசும் செய்து வருகிறது” என தெரிவித்துள்ளார்.