பிரபலங்கள் பலர் டிவிட்டரில் கணக்கு வைத்துள்ளனர்.  பல அரசியல்வாதிகள்,  நடிகர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரும் டிவிட்டரில் கணக்கு வைத்துள்ளனர்.    இதில்  பின் தொடர்வோர் எண்ணிக்கையை வைத்து அவர்களின் புகழை மற்ற டிவிட்டர் உபயோகிப்பாளர்கள் ஊகிக்கின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2013 ஆம் ஆண்டு டிவிட்டரில் கணக்கு தொடங்கினார்.    அவர் டிவிட்டரில் அடிக்கடி பதிவுகள் பதிவது கிடையாது.   எப்போதோ ஒரிரு பதிவுகள் பதிவதோடு சரி.   அப்படி இருந்த போதும் ரஜினிகாந்தை சுமார் 46.8 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் கணக்கு தொடங்கி இரு ஆண்டுகள் கழித்து கமலஹாசன் டிவிட்டரில் கணக்கு தொடர்ந்தார்.    அவர் ரஜினிகாந்தை போல இல்லை.   அரசியல், திரைப்படங்கள், சமூகம் குறித்து பல விஷயங்களிலும் தனது கருத்துக்களை பதிவிட்டார்.   தற்போது கமலஹாசன் கட்சி தொடங்கி முழு நேர அரசியல்வாதியாக உள்ளார்.

கமலஹாசன் பல பதிவுகளை இடுவதால் ரஜினிகாந்தை விட அதிகம் பேர் பின் தொடர்கின்றனர்.  தற்போது கமலஹாசனை டிவிட்டரில் 50 லட்சம் பேருக்கு மேல் பின் தொடர்கின்றனர்.   எனவே டிவிட்டர் உபயோகிப்பாளர்களை பொறுத்த வரை கமலஹாசன் ரஜினிகாந்தை முந்தி உள்ளார்.