டிவிட்டர் மூலம் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த கமலஹாசன்

சென்னை

புத்தாண்டை முன்னிட்டு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமலஹாசன் டிவிட்டர் மூலம் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் பிரபல நடிகருமான கமலஹாசன் டிவிட்டர் மூலம் பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.   கட்சியைத் தொடங்கும் முன்பிருந்தே அவர் தனது கருத்துக்களை டிவிட்டர் மூலம் வெளியிடுவது வழக்கமாகக் கொண்டிருந்தார்.

 

இன்று புத்தாண்டை முன்னிட்டு அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில்,

கைகுலுக்கி வாழ்ந்து பரிமாறும் ஆண்டு மட்டுமல்ல, கரம் கோர்த்து களமாடும் ஆண்டு.   நீ, நான், நாம் என அனைவரும் இணைந்து களமாடினால் பாரதி சொன்னது போல் வான்புகழ் கொண்ட  தமிழகமாக மீண்டும் ஆக்கலாம்.  இன்று தொடங்குவது புத்தாண்டு மட்டுமல்ல நம் வெற்றிப்பயணமும் தான்.  நாளை நமதே.  புத்தாண்டு வாழ்த்துக்கள்.

எனப் பதிந்துள்ளார்.