கமலஹாசனின் டிவிட்டர் பொங்கல் வாழ்த்து

சென்னை

டிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் டிவிட்டரில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்

பொங்கல் பண்டிகை இன்று முதல் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது தமிழர் திருநாள் என அழைக்கப்படும் பொங்கல் விழாவில் இன்று போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.  நாளை பொங்கல், நாளன்றைக்கு மாட்டுப்பொங்கல் அதற்கு அடுத்த நாள் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

நாளை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல தலைவர்களும் வாழ்த்துச் செய்திகள் அளித்து வருகின்றனர்.  அவ்வகையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கமலஹாசன் டிவிட்டரில், “அச்சத்தில் இருந்து துணிவுக்கு; ஊழலில் இருந்து நேர்மைக்கு; தீமைகளில் இருந்து நன்மைக்குச் செல்லும் பயணத்தைத் தொடங்கியிருக்கிறோம். பாதையில் உற்சாகம் பொங்கட்டும். நந்தமிழர் திருநாளில் நன்னம்பிக்கை பொங்கட்டும். அதன் குறியீடாகப் பொங்குக பொங்கல்.” என வாழ்த்து தெரிவித்துள்ளார்.