சென்னை

மிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு டிசம்பர் 13 முதல் கமலஹாசன் பரப்புரை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.  இதையொட்டி பல அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.  திமுக ஏற்கனவே தனது பரப்புரையைத் தொடங்கி நடத்தி வருகிறது.

பிரபல நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் டிசம்பர் 13 முதல் டிசம்பர் 16 வரை தேர்தல் பரப்புரை நடத்த உள்ளார்.  அவர் தனது முதற்கட்ட பரப்புரையை ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்னும் தலைப்பில் தொடங்க உள்ளார்.