கமல் – லோகேஷ் கனகராஜ் இணையும் படத்தலைப்பு டீசர் நாளை வெளியாகிறது…..!

‘மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து தற்போது கமல்ஹாசன் நடிக்கும் 232 வது படத்தை இயக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ்.

இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. ராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரிக்கும் கமலின் 232-வது படத்தை எழுதி இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் .

நாளை கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் படத்தலைப்பு டீசர் நாளை மாலை 5 மணிக்கு வெளியிடப்படுகிறது. இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.