பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை யடுத்து மும்பை மருத்துவமனையில் நேற்று இரவு சேர்க்கப்பட்டார். கடந்த சில நாட்களில் தன்னுடன் தொடர்பு கொண்டிருந்தவர்களை தங்களை பரிசோதித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

அமிதாப் கொரோனா தொற்றிலிருந்து விரைவில் குணம் அடைய வேண்டும் என அவரது ரசிகர்கள் நெட்டில் மெசேஜ் பகிரும் நிலையில் பிரபலங்களும் அவர் விரைவில் குணம் அடைய விருப்பம் தெரிவித்து பிரார்த்தி வருகின்றனர்.
உலகநாயகன் கமல்ஹாசன், நடிகர் அமிதாப் குணம் அடைய விருப்பம் தெரிவித்து மெசேஜ் வெளியிட்டிருக் கிறார். அதில், ’அமிதாப்பச்சன், அபிசேக் பச்சன் விரைந்து குணம் அடைய எனது விருப்பத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய மருதுவர்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அமிதாப்பச்சன் தனது உடல் நிலை சுகவீனத்திலிருந்து மீண்டு வருவார். பழைய சுறுசுறுப்புடன் பணி களை விரைவில் தொடங்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் தனுஷ், “ஐயா அமிதாப் விரைவில் குணமடையுங்கள், உங்கள் விரைவான மீட்சிக்கான எனது உண்மையான பிரார்த்தனைகள் ” என தெரிவித்திருக் கிறார்.
ஆர் பால்கி இயக்கிய ஷமிதாப் என்ற இந்தி படத்தில் அமிதாப்பச்சனுடன் தனுஷ் இணைந்து நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.