தர்பார் மோஷன் போஸ்டரை வெளியிடும் கமல், சல்மான், மோகன்லால்: இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் அறிவிப்பு

தமிழ், மலையாளர் உட்பட 4 மொழிகளில் வெளியாகும் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரை கமல்ஹாசன், சல்மான்கான், மோகன்லால் ஆகியோர் வெளியிடுகிறார்கள்.

நடிகர் ரஜினிகாந்தின் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய 4 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் இந்த படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வர இருக்கிறது. நாளை மாலை 6 மணிக்கு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட உள்ளது.

இந்நிலையில், இந்த போஸ்டரை  தமிழ்- தெலுங்கில்  கமல்ஹாசனும், பாலிவுட்டில் சல்மான்கானும், மலையாளத்தில் மோகன்லாலும் வெளியிடுவார்கள் என படத்தின் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் அறிவித்துள்ளார்.

நாளை நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாள் என்பதால், அவரை வைத்தே மோஷன் போஸ்டர் வெளியிடப்பட உள்ளதோடு, தீம் மியூஸிக்கும் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி