கமலின் பிக்பாஸ் – ஜூன் 17 முதல் ஒளிபரப்பாகும்  

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் “பிக் பாஸ் 2”  நிகழ்ச்சி வரும் 17 தேதி ஒளிப்பரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் விஜய்  தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய “பிக் பாஸ்” பெரும் வெற்றி பெற்றது.  கடந்த வருடம் ஜூன் 25 ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி, செப்டம்பர் 30 ஆம் தேதி முடிவடைந்தது.

இந்தியில் மிகப் பிரபலமான இந்த நிகழ்ச்சி தமிழில் வெளியான போது வெற்றிபெறுமா என சந்தேகம் இருந்தது.  ஆனால், கமல் தொகுத்து வழங்குகிறார் என்றதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. சினிமாவில் வாய்ப்பு இல்லாததால்தான் கமல் தொலைக்காட்சி தொகுப்பாளானர்கள் என்றும் பேசப்பட்டது.

ஆனால் ஓவியா –  ஆரவ் காதல், ஓவியா – காயத்ரி மோதல், ஜூலியின் சுயநலம் என பிக்பாஸ் முதல் பார்ட் தமிழக ரசிகர்கள் இடையே வரவேற்பை பெர்றது.

இந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற சினேகன், காயத்ரி ரகுராம், வையாபுரி, பரணி, ஷக்தி, ஜூலி, என  பலரும் பல திரைவாய்ப்புகளைப் பெற்றனர்.

குறிப்பாக,  நடிகை ஓவியாவிற்கு என்றே ஓவியா ஆர்மி  என்ற இணையதள பக்கத்தை ஆரம்பித்தனர் அவரது ரசிகர்கள்.

இந்நிலையில்  பிக் பாஸ் 2ம் பகுதியில் கமல்ஹாசன் தொகுப்பாளராக இருப்பாரா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் மீண்டும் அவரே தொகுத்து வழங்குவது உறுதியானது.

இந்நிலையில் பிக் பாஸ் 2   வரும் 17 தேதி முதல் ஒளிப்பரப்பாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: kamalhaasan-s-bigg-boss-telecast-on-june-17, கமலின் பிக்பாஸ் - ஜூன் 17 முதல் ஒளிபரப்பாகும்
-=-