சுஜா வருணியின் திருமணத்தை நடத்தி வைக்கும் கமலஹாசன்

--

சென்னை

பிக் பாஸ் புகழ் நடிகை சுஜா வருணியின் திருமணத்தை கமலஹாசன் வரும் 19ஆம் தேதி நடத்தி வைக்கிரார்.

நடிகை சுஜா வருணி பல படங்களில் நடித்தவர். பிக் பாஸ் சீசன் 1 போட்டியில் வைல்ட் கார்ட் எண்டிரியாக நுழைந்து பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார். அந்த நிகழ்வில் கமலஹாசனிடம் தனது தந்தை தங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்ததை கூறி வருத்தப்பட்டார். அப்போது கமலஹாசன் தன்னை சுஜாவின் தந்தையாக நினைக்குமாறு கூறினார்.

தற்போது சுஜா வருணிக்கு திருமணம் நடைபெற உள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேரனும் ராம்குமாரின் மகனுமான சிவாஜி தேவ் என்னும் சிவகுமாரை சுஜா காதல் மணம் புரிய உள்ளார். இந்த திருமணம் கமலஹாசன் தலைமையில் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த திருமணத்தின் முதல் அழைப்பிதழை சுஜாவும் சிவகுமாரும் கமலுக்கு வழங்கினார்கள். இது குறித்து, “பிக் பாஸ் நிகழ்வில் எனது தந்தை ஸ்தானத்தில் இருந்து என் திருமணத்தை நடத்தி தர வேண்டும் என கமலுக்கு கோரிக்கை விடுத்தேன். அதற்கு கமல் ஒப்புக் கொள்ளவே என் திருமணத்தை அவர் நடத்தி வைக்க உள்ளார்” என சுஜா தெரிவித்துள்ளார்.