கேரள போலீசுக்கு கமலஹாசன் பாராட்டு மழை..

கேரள போலீசுக்கு கமலஹாசன் பாராட்டு மழை..


கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கேரள மாநில போலீசார், அண்மையில் தாங்கள் பாடிய பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் அந்த பாடல், கொரோனா உயிர் கொல்லி நோயை ஒழிக்கக் கேரள போலீசார்,தெருக்களில் இறங்கிச் செயல்படும் விதத்தை கழுகுப்பார்வையில் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர்.
அதனைப் பாராட்டி நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமலஹாசன், கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயனுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த பாடலை வெகுவாக சிலாகித்துள்ள கமல், ‘’ கேரள போலீசுக்கு என் சல்யூட்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதம் அங்குள்ள காவல்துறையினரை நெகிழச்செய்துள்ளது.

இதனையடுத்து கேரள காவல்துறை இயக்குநர் லோக்நாத் பேரா, கமலஹாசனுக்கு நன்றி கடிதம் ஒன்று எழுதியுள்ளார்..

‘’ இந்திய சினிமாவின் அற்புதமான நட்சத்திரங்களில் ஒருவரான உங்கள் பாராட்டு, எங்களைப் பெருமிதம் கொள்ள வைத்துள்ளது.

உங்கள் பாராட்டு கொரோனா பணியில் எங்களை மேலும் ஊக்கத்துடன் செயல்படவைக்கும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்- கேரள போலீஸ் டி.ஜி.பி.

இந்த கடிதத்தைக் கமலஹாசனின்,மக்கள் நீதி மய்ய அலுவலகம், தனது டிவிட்டரில் பதிவு செய்துள்ளது.

– ஏழுமலை வெங்கேசன்