சென்னை,

ழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலக மாடிப்படியில் இருந்து கடந்த 13ம் தேதி நடிகர் கமல்ஹாசன் தவறி விழுந்தார். .  உடனடியாக ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டார்.  அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.   தற்போது,  மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

3gandhi-abha

தற்போது கமல் தேறி வருவதாகவும், சீக்கிரம் வீடு திரும்புவார் என்று  அவரது தோழி கவுதமியும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், மருத்துவமனையில் நேற்று  நடந்ததாக கமல்ஹாசன்  தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
அதில், “ரசிகர்களுடனும் நண்பர்களுடனும் பகிர ஓர் நற்செய்தி. இன்று எழுந்து நடந்தேன். காந்தியார் போல தோள் தாங்க இருவருடன்தான் என்றாலும்  முன்னேற்றம். வலி சற்று குறைந்திருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து காந்தி படத்தி்ல் கமல் முகத்தை மார்பிங் செய்து, “கமல் காந்தி” என்று சமூகவலைதளங்களில் ஒரு படம் உலாவருகிறது.

தேசத்தந்தை என போற்றப்படும் காந்தியாரை இப்படி கிண்டலடிக்கலாமா என்று ஆதங்கப்படுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.