ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் : கமலஹாசன் பங்கேற்பு

தூத்துக்குடி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கமலஹாசன் கலந்துக்கொண்டுள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள், மாணவர்கள், ஆகியோர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   குமரரெட்டியாபுரத்தில் கடந்த 48 நாட்களுக்கும் மேலாக இந்த போராட்டம் நடந்து வருகிறது.   இந்நிலையில்  இந்த தொழிற்சாலைக்கான தடையில்லா சான்றிதழ் நேற்றுடன் முடிவடைந்தது.   அதை நீட்டிக்கக் கூடாது என போராட்டக்காரர்கள் அரசை வலியுறுத்தி உள்ளனர்.

மக்கள் போராட்டம்

பொது மக்களின் இந்த போராட்டத்துக்கு அரசியல் தலைவர்கள் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.   தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் இந்த போராட்டத்தில் கலந்துக் கொண்டுள்ளார்.

விமான நிலையத்தில் கமல்

முன்னதாக தூத்துக்குடிக்கு செல்லும் போது விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை கமலஹாசன் சந்தித்தார்.   அப்போது அவர், “இந்த விவகாரத்தில் ஒரு நல்ல தீர்வு காண வேண்டும் என நான் அரசின் மீது அழுத்தம் கொடுக்க உள்ளேன்”  என தெரிவித்துள்ளார்