அரவிந்த் கெஜ்ரிவால் போராட்டத்துக்கு கமலஹாசன் ஆதரவு

                                                      பழைய படம்

சென்னை

ளுநர் மாளிகையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வரும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோருக்கு கமலஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

டில்லியில் தலைமைச் செயலாளர் தாக்கப்பட்டதாக எழுந்த புகாரினால் அரசின் அனைத்து செயலர்களும் அமைச்சர்களுடன் ஒத்துழைப்பதில்லை.  இதனால் அரசுப் பணிகள் நடப்பதே இல்லை.    இதை ஒட்டி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் சிசோடியா உள்ளிட்ட அமைச்சர்கள் ஆளுநரை சந்தித்தனர்.

அரசு செயலர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் ஆளுநருக்கு கோரிக்கை விடுத்தனர்.   அதற்கு ஆளுநர் மறுத்து விட்டார்.  அதன் பிறகு ஆளுநர் மாளிகையில் கெஜ்ரிவால், சிசோடியா மற்றும் அமைச்சர்கள் உள்ளிருப்பு போராட்டம் தொடங்கினர்.   மூன்று நாளாக இந்த போராட்டம் நடைபெறுகிறது.

இந்த போராட்டம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமலஹாசன், “தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் நிர்வாகத்தில் தலையீடு கூடாது.  இது மக்களுக்கு மாற்றத்துக்கு பதில் ஏமாற்றத்தை அளிக்கும்” என ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதற்கு அரவிந்த் கெஜ்ரிவால், “நன்றி. கமல்.   தில்லி மக்களுக்கு பணியாற்ற எங்களை பிரதமர் அனுமதிப்பார் என நான் நம்புகிறேன்” என பதில் அளித்துள்ளார்.