திருவள்ளூர்:

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், இன்று எட்டு கிராமங்களை தத்தெடுத்தார்.

 

. மே தினத்தையொட்டி திருவள்ளூர் மாவட்டம் அதிகத்தூரில் கிராம சபைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார்.  அப்போது அவர், “12 ஆயிரம் கிராமங்களை தத்தெடுக்க இயலாது. அதனால் 8 கிராமங்களை தத்தெடுத்துள்ளோம். மக்களின் ஆதரவும் உதவியும் இருந்தால் 12 ஆயிரம் கிராமங்களை எங்களால் தத்தெடுக்க முடியும். வெற்றி பெற நினைக்கும் பாதையில் நாங்கள் நடந்துசென்றுகொண்டிருக்கிறோம். எங்களுக்கு ஓட்டு போட வேண்டும் என்பதற்காக நாங்கள் கிராமங்களை தத்தெடுக்கவில்லை.

தத்தெடுக்கப்பட்ட கிராமங்களில் அரசுப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும். கல்விக்கு நிகரானது ஆரோக்கியம். அதனால் 100 கழிப்பறைகள் கட்டித் தரப்படும். கிராமங்கள் இன்னும் பசுமையாக இருக்க மரங்களை நட இருக்கிறோம்.  திறமைகளை வளர்த்து கொள்வதற்காக கிராம மக்களுக்கு பயிற்சி வகுப்புகள் எடுக்கப்படும். நீர் சேகரிக்க வசதியாக குளம், குட்டைகள் சீரமைக்கப்படும். எங்களால் செய்ய முடியும் விஷயங்கள் அனைத்தையும் செய்வோம். செய்ய முடியாததை எங்களால் முடியவில்லை, எப்படி செய்ய வேண்டும் என உங்களுடன் கலந்தாலோசித்து செய்வோம்” என்று கமல்ஹாசன் பேசினார்.