இந்தியன்-2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி : நடிகர் கமல்ஹாசன்

 

நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் இந்தியன் 2 படம் தயாராகி வருகிறது.

நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உதவி இயக்குனர் கிருஷ்ணா, ஆர்ட் உதவியாளர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது ஆகியோர் இந்த விபத்தில் பலியானார்கள்.

விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சினிமா தொழிலில் இருக்க வேண்டிய பாதுகாப்பு இல்லை என இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்து குறித்து செய்தியாளர் சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.