தேர்தல் ஆணையத்தில் ஆஜராகிறார் கமல்ஹாசன்

தனது மக்கள் நீதி மையம் என்ற கட்சியின் பெயரை பதிவு செய்வதற்காக கமல்ஹாசன் இன்று தேர்தல் ஆணையத்தில் ஆஜராகிறார்.

பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் தனது அரசியல் பிரவேசத்தை வெளியிட்ட நடிகர் கமல்ஹாசன், “மக்கள் நீதி மய்யம்” என்ற கட்சியை துவக்கினார்.

இக்கட்சியின் முதல் மாநாடு மதுரையில் பிரம்மாண்டமான துவக்க விழா நடத்தினார். பிறகு திருச்சியில் மாநாடு நடத்தினார்.

இதற்கிடையே அரசியல் நிகழ்வுகள் குறித்து தனது கருத்துக்களை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வந்ததோடு, கொசஸ்தலை ஆற்றை பார்வையிடல், காவிரிக்காக கர்நாடக முதல்வரை சந்தித்தல், இதர பல அரசியல் பிரமுகர்களை சந்தித்தல் என பரபரப்பான அரசியல்வாதியாக மாறினார் கமல்ஹாசன்.

இதற்கிடையில் தனது, விஸ்வரூபம் 2 படத்தின் வேலைகளை முடித்தார். அது ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது. மேலும் தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

இந்த நிலையில் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியின் பெயரை பதிவு செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.  இதற்காக அவர் தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே நேரம் ஆஜராகி இருந்தார். கட்சி தொடங்கிய பின் அதன் சின்னம் மற்றும் கட்சியின் பெயரை பதிவு செய்ய வேண்டும் என்பதால் கமல்ஹாசன் தேர்தல் ஆணையத்தில் ஆஜராக உள்ளார். இன்று   மாநில தேர்தல் ஆணைய தலைமையகத்தில் ஆஜராவார் என்று அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.