ஓடிடி தளத்தில் முத்திரை பதிக்கவிருக்கும் கமல்ஹாசன்…..!

கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களிடையே ஓடிடி தளங்கள் பிரபலமாகி வருகின்றன. முழுமையாக முடிக்கப்பட்ட படங்களை பல்வேறு ஓடிடி தளங்கள் போட்டியிட்டு வாங்கி வெளியிட்டு வருகின்றன.

தற்போது இந்த ஊரடங்கில் ஓடிடி தளத்துக்கான தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார் கமல்ஹாசன். ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தின் மற்றொரு கிளை நிறுவனமான டர்மரிக் மீடியா நிறுவனம் மூலமாக ஓடிடி தளத்துக்கான தயாரிப்பில் ஈடுபடவுள்ளார்.

டர்மரிக் மீடியாவுடன் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு வெளிநாட்டு நிறுவனமும் இதில் கைகோத்துள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன்பே டிடிஹெச்சில் நேரடியாக படங்கள் வெளியீடு தொடர்பாக பேசி சர்ச்சையில் சிக்கினார் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது .