இந்திய கதாநாயகர்களின் வீரத்தை வணங்குகிறேன்…! கமல்ஹாசன்

சென்னை:

பாகிஸ்தானில் புகுந்து பயங்கரவாத முகாம்களை அழித்துவிட்டு திரும்பிய, விமானப்படை வீரர்களான, இந்திய காதாநாயகர்களின் வீரத்தை வணங்குகிறேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்திய விமானப்படை போர் விமானங்கள் பாகிஸ்தான் எல்லைப் பகுதியான பலாகாட் என்ற பகுதியில் நடத்திய தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது என்ற அமைப்பினை சேர்ந்த  பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன.

இந்த தாக்குதலுக்கு 12 மிராஜ் 2000 வகை போர் விமானங்களும், சுமார் 1000 கிலோ குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாகவும் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய விமானப்படை வீரர்களின் தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட அரசியல் கட்சியினர் வரவேற்பும், தெரிவித்தும் தெரிவித்துள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசனும் வாழ்த்து தெரிவித்து டிவிட் போட்டுள்ளார்.

அவரது டிவிட்டர் பதிவில்,  பாக்கிஸ்தான் பயங்கரவாத முகாம்களில் பேரழிவை ஏற்படுத்திவிட்டு பாதுகாப்பாக தாயகம் திரும்பிய வீரர்களான கதாநாயகர்களின் செயலுக்கு இந்தியா பெருமிதம் கொள்கிறது. நான் அவர்களின் வீரத்துக்கு தலை வணங்குகிறேன் என்று கூறி உள்ளார்.

கார்ட்டூன் கேலரி