தயவாய் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் : கமல் ட்விட்

சென்னை :

போக்குவரத்து ஊழியர்கள் பிரச்னைக்கு தீர்வு காண தொழிலாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு நடிகர் கமலஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘தமிழக முதலமைச்சர், மக்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளையும் மனதில் கொண்டு, தயவாய் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். பொங்கலுக்கு அதுவே அரசு தரும் விலைமதிப்பிலா பரிசாகும்” என்று கமல் தெரிவித்துள்ளார்.