வெளியானது கமலி from நடுக்காவேரி‬ டீசர்….!

புதுமுகம் ராஜசேகர் இயக்கத்தில் ஆனந்தி நடிக்கும் புதிய படம் கமலி ஃபிரம் நடுக்காவேரி.

அபுண்டு ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் புது முகம் ரோஹித் செராப், பிரதாப் போத்தன், அழகம் பெருமாள், இமான் அண்ணாச்சி, ரேகா சுரேஷ், ஶ்ரீஜா பிரியதர்ஷினி, கார்த்தி ஶ்ரீனிவாசன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். தீனதயாளன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜகதீசன் லோகயன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ட்விட்டரில் வைரலானது. முன்னதாக, யார் அந்த கமலி (#whoiskamali) எனும் ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்தார்கள்.

இந்நிலையில் இதன் டீசரை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர் .