கமல் 61 வருடம்: போட்டா படியுது.. வீடியோ வெளியிட்ட லோகேஷ்..

ளத்தூர் கண்ணம்மா’வில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கமல்ஹாசன் இன்று உலக நாயகனக விஸ்வரூபம் எடுத்திருக் கிறார். அவரது திரையுலக பயணம் 61 ஆண்டுகள் கடந்திருக்கிறது. அதை வீடியோவாக ’மாஸ்டர்’ பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு வாழ்த்து கூறி உள்ளார்.


அதில்,’கமல்சாரின் 61 வருட திரையுலக பயணத்துக்கான ரெபல் ஆன்ந்தம் வெளி யிடுவதற்கு எனக்கு கிடைத்த வாய்ப்பை கவுரமாக கருதுகிறேன். அவர் நடித்த ’சத்யா’ படத்தில் இடம் பெற்ற ’போட்டா படியுது’ அருமையான பாடலுடன் இந்த டிசைனை டைரக்டர் அரவிந்த் ஸ்ரீதர் உருவாக்கினார்; லோகேஷ் என குறிப்பிட் டுள்ளார்.
61 வருட திரையுலக பயணத்துக்கு வாழ்த்து கூறிய லோகேஷ் கனகராஜுக்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்தார்.
‘அறுபத்தோறு ஆண்டு திரையுலக பயணத் தை கொண்டாடும் வீடியோ பார்த்து நெகிழ்ந்தேன். உங்களின் அளவு கடந்த அன்புக்காக நான் தரும் பதில்பரிசு இதே அளவுக்கானதாக இருக்கும். எனக்கு தரும் இந்த ஊக்கம் இந்த மராத்தான் ஓட்டப் பந்தயத்தில் என்னை தொடர்ந்து ஓட வைக்கின்றது; எனக் கூறி உள்ளார்.


லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படம் இயக்கி உள்ளார். இதையடுத்து கமல்ஹாசன் தயாரிக்க ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார். அடுத்து ’தலைவன் இருக்கிறான்’ படத்தில்,  நடிக்கிறார்.