கமல் பிறந்தநாள்: ராகுல்காந்தி, கேரள முதல்வர், ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சியினர் வாழ்த்து…

சென்னை: நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவருமான கமல்ஹாசனின் பிறந்த நாள் இன்று. இதையொட்டி அவருக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன்,  திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் மூத்த  நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது 66-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இதனிடையே கொரோனா பரவல் காரணமாக பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்கும்படி தனது கட்சியினருக்கு கமல்ஹாசன் அறிவுறுத்தியிருந்தார்.

இதையடுத்து கமல்ஹாசனுக்கு திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

Mahendragarh: Congress leader Rahul Gandhi greets supporters as he arrives to address a public meeting at Khel Parisar Ground in Haryana’s Mahendragarh, on Oct 18, 2019. (Photo: IANS)

ராகுல்காந்தி

இந்நிலையில் கமல்ஹாசனுக்கு  அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய எம்.பி.யுமான ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவரது டிவிட்டில், திரு கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். தமிழ் கலாச்சாரத்துக்கு வலுவாக குரல் கொடுத்து சேவையாற்றும்  அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன்

கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள வாழ்த்து டிவிட்டில்  “அன்புள்ள கமல்ஹாசன் அவர்களுக்கு எனது அன்பான வாழ்த்துகள். அவர் பிறந்த நாள் மற்றும் இந்தாண்டு சிறப்பாக விளங்க வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார் .

திமுக தலைவர் ஸ்டாலின்

ஸ்டாலின்  வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “முத்தமிழ் அறிஞர் கலைஞரால் கலைஞானி என்று போற்றப்பட்ட எனது நெஞ்சம் நிறைந்த அன்புக்குரிய நண்பர் கமலஹாசனுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நலமுடன் நீண்ட காலம் வாழ வேண்டும்” என்று  கூறியுள்ளார்.