கமலின் இந்து தீவிரவாதம்: போலீஸ் கமிஷனருக்கு ஐகோர்ட்டு உத்தரவு!

சென்னை,

ந்து தீவிரவாதம் என்று குறிப்பிட்டு வார இதழ் ஒன்றில் கட்டுரை எழுதியிருந்தார் நடிகர் கமல்ஹாசன். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய  மாநகர காவல் ஆணையரிடம்  புகார் கூறப்பட்டது.

இதுகுறித்த வழக்கில் சென்னை மாநகர காவல் ஆணையர் ஒரு வாரத்தில் பதில் அளிக்கும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

வார இதழ் ஒன்றில் கமல் எழுதியுள்ள கட்டுரையில், தமிழக இறையாண்மைக்கும், இந்து மதத்துக்கும் எதிராகவும், இந்து மக்களை தீவிரவாதி என முத்திரை பதிப்பது போன்ற வகையில் எழுதியுள்ளதாகவும், அதன் காரணமாக அவர்மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என்றும், எழுதியது குறித்து கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும்  கடந்த 4ந்தேதி மனு கொடுக்கப்பட்டது.

இந்த மனுமீது இதுவரை மாநகர போலீஸ் கமிஷனர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, சென்னை ஐகோர்ட்டில் மனுதாரர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.  வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ். ரமேஷ் மனு குறித்து ஒரு வாரத்தில் காவல்துறை தங்கள் தரப்பு விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தார்.