சென்னை:

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என பேசிய கமலுக்கு எதிராக டில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு வரும் 16ந்தேதி விசாரணைக்கு வருகிறது.

அரவக்குறிச்சியில் தேர்தல் பிரசாரம் செய்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர், அங்குள்ள இஸ்லாமிய மக்கள் வசிக்கும் பகுதியில் அவர்களின் வாக்கை பெறும் நோக்கில், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதியான நாதுராம் கோட்சே, அவர் இந்து தீவிரவாதி என கூறினார். கமலின் கருத் துக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அவரது கட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. நாடு முழுவதும் கமலின் பேச்சுக்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

இந்த நிலையில், கமலின் பேச்சு குறித்து,  இந்து சேனா அமைப்பை சேர்ந்த விஷ்ணு குப்தா என்பவர் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை வரும்  மே16 பிற்பகல்  விசாரிப்பதாக டெல்லி நீதிமன்றம் அறிவித்து உள்ளது.