கமலின் இந்தியன்-2 ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

பிரபல இயங்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே சங்கர் இயக்கத்தில் இந்தியன் படம் வெளியாகி பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது. அந்த படத்தில் ஊழலுக்கு எதிராக தியாகி வேடத்தில் நடித்துள்ள கமல், தற்போது அந்த  படத்தின் இரண்டா வது பாகமான  ‘இந்தியன்2’ என்ற படத்திலும் நடிக்கிறார்.

தற்போது மக்கள் நீதி மய்யம் அரசியல் கட்சி தொடங்கி,  ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் கமல், இந்தியன் 2 படத்தில் நடிப்பதின் மூலம் தனது இமேஜை பொது மக்களிடம் மேலும் உயர்த்தும் என நினைத்து, 21 வருடங்களுக்குப் பிறகு ஷங்கரும், கமலும் இணைந்துள்ளனர். இந்த படத்தை பிரபல . தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார்..

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளி லும் இந்தியன் 2 தயாராக உள்ளது. தற்போது  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளி யிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியன் 2 படத்தில் வயதான சேனாபதி கதாபாத்திரத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ புகைப்படம் வெளியாகி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வர்மக்கலை முத்திரையான இருவிரல் ஆக்ரோஷத்துடன் முகம் ‘ஜூம்’ செய்யப்பட்ட நிலையில் வெளியான இந்தப்படம் பலரையும் கவர்ந்துள்ளது.

இந்தியன்2 படப்பிடிப்பு வரும் 18-ம் தொடங்கும் என்ற அறிவிப்பையும் இந்த ‘பர்ஸ்ட் லுக்’ புகைப்படத்துடன் இயக்குனர் சங்கர் வெளியிட்டுள்ளார்.

கார்ட்டூன் கேலரி