கமலின் “கவிதை மனு” இப்படித்தான் இருக்குமாம்!

--

நெட்டிசன்:

கே.எஸ். சுரேஷ்குமார் (K.S. Suresh Kumar  ) அவர்களின் முகநூல் பதிவு:

ஆண்டவரே மனுவை உங்க மாதிரி கவிதையா போடவா..?

“ஐயன்மீர் ஆட்சியரே எம்மிடத்தில்
எந்நேரமும் மதுக்கடைகள் எப்பவும் மூடா!
இது நாடா பெண்டிர்கள் செல்ல அச்சமூட்டும் காடா!
கும்பிகள் ஒடுங்க குண்டிகள் தெரிய சுயநினைவின்றி ஒரு கூட்டம்!
மூடர்கூடமென ஆட்சியரும்…
லஞ்ச லாவண்யத்தில் காவலரும் இருக்க
எத்துணை மனுவும்
போராட்டமும் வீணெ!
அடியேன் விண்ணப்பித்துள்ளேன்!
விடை தருவீரோ!
இல்லை விடை பெறுவீரோ”

இல்ல தபூசங்கர் மாதிரி போடவா..?

“நல்ல தண்ணீர் கேட்டேன்
கோட்டர் தந்தாய்!
நல்ல சாலைகள் கேட்டேன்
வங்கி கடனென
என் வாகனத்தைப் பிடிங்கிக் கொண்டாய்
பருப்பு வாங்க போனேன்
ஜிஎஸ்டி என்றாய்!

#என்னை குண்டாஸ்ல போடாம இருந்தா செரி!