கமலின் அரசியல் அறிவிப்பு! விவேக் வரவேற்பு

--

சென்னை,

மீப காலமாக மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கருத்து தெரிவித்த கமல் சமீபத்தில் அரசியலுக்கு வருவது உறுதி என்று கூறினார். அதைத்தொடர்ந்து முதல்வராக ஆசை என்றும் கூறி அதிரடியாக அரசியலுக்கு வருவதை மீண்டும் உறுதி செய்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் கமல் அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்ததற்கு தமிழக அரசியல் கட்சியினர் எதிர்ப்பும், வரவேற்பும் அளித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் கமல் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக நடிகர் விவேக் கூறி உள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில்,அரசியலுக்கு வருவதை உறுதி செய்த கமல்!அவர் மனத்திண்மையைப் பாராட்டுகிறேன்.இந்த உறுதி இறுதி வரை இருக்க நேர்மையாளரின் சார்பில் வாழ்த்துகிறேன்!  என பதிவிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து அடுத்த பதிவில் நடிகர் விவேக், அரசியலுக்கு வருவது யாராக இருப்பினும், வாழ்த்துவது மரபாக இருப்பினும், மகுடம் தரிக்க வைப்பது மக்களே! என்றும் குறிப்பிட்டுள்ளார்.