மானபங்கப்படுத்தப்பட்ட நடிகையின் பெயரை நடிகர் கமல் ஹாஸன் குறிப்பிட்டது சட்டப்படி தவறு என நடிகை கவுதமி கூறியுள்ளார்.

கேரளாவில் இளம் நடிகை ஒருவர் காரில் கடத்தி மானபங்கப்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் நடிகர் திலீப், பல்சர் சுனி உள்பட பலரை கேரளா போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து எழுந்திருக்கும் சர்ச்சைகள் தொடர்பாக அந் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நடிகர் கமல்ஹாசன்  செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

அப்போது கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த கமல்
மானபங்கப்படுத்தப்பட்ட  கேரள நடிகையின் பெயரை குறிப்பிட்டார்.

நடிகையின் பெயரை கமல் குறிப்பிட்டது தவறு என்று தேசிய மகளிர் ஆணையம் கமலுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து கமல் மன்னிப்பு கேட்டார்.

இந்த நிலையில் இது குறித்து செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகை “அந்த நடிகைக்கு நடந்தது வேதனையான விஷயம். அவரது பெயரை கமல் குறிப்பிட்டிருக்கக் கூடாது.  கமலின் செயல் சட்டப்படி தவறு” என்று தெரிவித்துள்ளார்.

திருமணம் செய்துகொள்ளாமல் கமலும் கவுதமியும் சில ஆண்டுகள் இணைந்து வாழ்ந்து, சமீபத்தில் பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.