ஆகஸ்டு 10ந்தேதி வெளியாகிறது கமலின் ‘விஸ்வரூபம்2’ : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கஸ்டு 10ந்தேதி  கமலின் ‘விஸ்வரூபம்2’ வெளியிடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் நடித்து, தயாரித்துள்ள படம் விஸ்வரூபம்-2. இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில், படத்தை உலகம் முழுவதும் வெளியிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தியாவில்  ஆகஸ்டு 15 சுதந்திரத் தினத்தன்று படம் வெளியாகும் என எதிர்பார்த்திருந்த நிலையில், ஆகஸ்டு 10ந்தேதி வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதே நாளில் பிரான்ஸ் நாட்டிலும் விஸ்வரூபம் வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கி, நடித்து வெளியான படம் விஸ்வரூபம். அந்த படத்திற்கு இஸ்லாமி யர்களிடையே  எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து படத்தின் சில பகுதிகள் நீக்கப்பட்டு வெளியாகி சாதனை படைத்தது. அதையடுத்து விஸ்வரூபம்2 என்ற பெயரில் அந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கப்பட்டு வந்தது. இந்த படத்தில் விஸ்வரூபம்  முதல்பாகத்தில் கமலுடன் நடித்த பூஜாகுமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர்கபூர் உள்பட பலரும் இரண்டாம் பாகத்தில் தொடருகின்றனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

விஸ்வரூபம்-2 படம் சென்சார் பிரச்சினைகளை முடித்துள்ள நிலையில் படத்தை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில்  விஸ்வரூபம் 2 படத்தை வருகிற ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியிடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.