மத்தியஅமைச்சர் கிரண் ரிஜ்ஜு அழைப்பை மறுத்த கம்பாளா வீரர் ஸ்ரீநிவாசா கவுடா…

மைசூரு:

கம்பாளா வீரர் ஸ்ரீநிவாசா கவுடாவின் அசாத்தியமான திறமை சமுக ஊடகங்களில் வைரலான நிலையில், ஸ்ரீநிவாசா கவுடாவை மத்திய விளையாட்டுத்துறை ஆணையம் அழைத்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.

ஆனால், கவுடா தனது கம்பாளா சாதனை மத்தியஅரசின் கவனத்திற்கு சென்றது தனக்கு உற்சாகத்தை அளிக்கிறது. இதற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளவர், மத்திய விளையாட்டுத்துறையின் அழைப்பை ஏற்க மாட்டேன் என்று தெரிவித்து உள்ளார்.

கர்நாட மாநிலத்தில் நடைபெற்று வரும் பாரம்பரிய  எருமை ஓட்டப்பந்தயமான கம்பாளா போட்டியில், அங்குள்ள கிராமப்பகுதியை சேர்ந்த  ஸ்ரீநிவாச கவுடா அதிவேகமாக ஓடி சாதனை படைத்தார். இவரது வேகம், ஜமைக்காவைச்  சேர்நத்   ஒலிம்பிக் வீரரான உசேன் போல்ட்-ஐ விட அதிக வேகம் என்று ஒப்பீடு செய்யப்பட்டது. இந்த தகவல் மத்திய விளையாட்டுத்துறையின் காதுகலுக்கு எட்டியதைத் தொடர்ந்து, கவுடாவை டெல்லிக்கு வருமான அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த செய்திகள் மீண்டும் வைலான நிலையில், தான் மத்திய விளையாட்டுத்துறையின் அழைப்பை ஏற்க வில்லை என்றும்,SAI சோதனைகளில் பங்கேற்க மாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.

தனது 15 வயதில் சேறும் சகதியுமான  நெல் வயல்களில் இறங்கி விவசாயம் சய்து வருவதாகவும், இதுவரை   நூற்றுக்கணக்கான கம்பாளா நிகழ்வுகளில் பங்கேற்று பல்லாயிரக்கணக்கான பரிசுகளை வென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளவர், தான் சம்பாதிப்பது தனக்கு போதுமானது… இதில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றும் தெரிவித்து உள்ளார்.

“கம்பாளா பந்தயத்தில், வேகமாக ஓடிவதற்கு குதிகால் முக்கிய பங்கு வகிக்கிறது, அதேசமயம் அது ஒரு பாதையில்  செல்வதற்கான ஜாக்கிகள்  அல்ல, எருமைகளுக்கு கூட கம்பாலாவில் பங்கு உண்டு. ஆனால், டிராக் பந்தயத்தில், அப்படி இல்லை என்று தெரிவித்து உள்ளார்.

கவுடாவுக்கு மாநில முதல்வர் சந்திக்க  அழைப்பு விடுத்துள்ளார். இன்று முதல்வரை ஸ்ரீநிவாச கவுடா சந்திக்க உள்ளார்.