நடிகர் விஜயை இயக்கப்போகிறார் ‘கனா’ இயக்குனர் அருண்ராஜா காமராஜ்…

சென்னை:

டிகர் சிவகார்த்திகேயன் நடித்த மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி  ‘கனா’ இயக்குனர் அருண்ராஜா காமராஜ், நடிகர் விஜயை வைத்து புதிய படம் இயக்க உள்ளதாக திரையுலக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரஜினி காந்தின் கபாலி படத்தில் இடம் பெற்ற நெருப்புடா.. நெருங்குடா.. பாடல் பெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து பாடலாசிரியராக பல பாடல்களை எழுதியுள்ள அருண்ராஜா காமராஜ் பின்னணி பாடகராக ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறார்.  விஜயின் மாஸ்டர் படத்தில் குட்டி ஸ்டோரி பாடலையும் எழுதியிருந்தார்.

இதற்கிடையில் அருண்ராஜா காமராஜ் சிவகார்த்திகேயனின் கனா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.  மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி  எடுக்கப்பட்ட இந்த படம் பெரும் வெற்றியை பெற்றது.  பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் விஜயின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு திரையுலகில் எழுந்த நிலையில், சமீபத்தில்  ஊடகம் ஒன்றில் பேசியவர், விஜயின் அடுத்தப்படத்தை இயக்குவது தொடர்பாக அவரை சந்தித்து பேசியதாக தெரிவித்திருந்தார்.

இதன் காரணமாக விஜயின் அடுத்த படத்தை அருண் காமராஜ் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.