காஞ்சனா 3 – திரை விமர்சனம்…!

ஆஸ்ரமக் குழந்தைகளையும், காதலியையும், தன்னையும் அழித்த அமைச்சரைப் பழிவாங்கத் துடிக்கும் காளி என்கிற பேயின் கதையே ‘காஞ்சனா 3’.

லாரன்ஸுக்குள் இரு பேய்கள் ஆட்டம் போடுகிறது . உண்மையில் அந்த ரோஸி, காளி என்ற பேய்கள் யார்? அவர்களின் முன் கதை என்ன? காளி லாரன்ஸின் உடலுக்கு புகுந்து யாரைப் பழிவாங்குகிறார் போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

ராகவன், காளி என்ற இரட்டைக் கதாபாத்திரங்களில் லாரன்ஸ் நடித்துள்ளார். லாரன்ஸின் மாமன் மகள்களாக ஓவியா, வேதிகா, நிக்கி தம்போலி நடித்துள்ளனர்.படத்தில் மூன்று நாயகிகள். யாருக்கும் பெரிதாக எந்த வேலையும் இல்லை.

கோடீஸ்வரன் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு ஏன் பேய் பிடிக்கிறது? பேய் அந்தப் பெண்ணைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம் ..? இதற்கெல்லாம் கடைசி வரை பதிலே இல்லை.

டெம்ப்ளேட்டை மாத்தாம பழைய கதையையே புகுத்தியிருப்பது ரசிகர்களை ரொம்பவே சோதிக்கிறது.குழந்தைகளை பேய்க்கதை சொல்லச் சொல்லி பயமில்லாதவாறு நடிப்பது, பயம் வந்தால் அம்மா அல்லது அண்ணியின் இடுப்பில் தாவி உட்கார்வது . மொத்தக் குடும்பத்தையும் பக்கத்தில் வைத்துக்கொண்டே மாமன் மகள்கள் மூவருடனும் செய்யும் காதல் சேட்டைகள் எல்லாமே அருவெறுப்பாக தான் உள்ளது…

மொத்தத்த்தில் நியூ வைன் இன் ஓல்ட் பாட்டில்,

கார்ட்டூன் கேலரி