காஞ்சனா-3 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது (வீடியோ)

 டிகர் ராகவா லாரன்ஸ் நடித்துவரும்  காஞ்சனா-3 படத்தின் மோஷன் போஸ்டரை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்து  ஏற்கனவே வெளியான காஞ்சனா, காஞ்சனா 2 படங்கள் பெரும் வெற்றியடைந்த நிலையில், காஞ்சனா-3 படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகறது. படத்திற்கு கதை வசனம் எழுதி இயக்குனராகவும்  கதாநாயகனாகவும்  நடித்து  வருகிறார்  ராகவா லாரன்ஸ்.

இந்த படத்தில் லாரன்சுடன்  ஓவியா, வேதிகா, நிக்கி தம்போளி, சூரி, கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். வெற்றி மற்றும் சர்வேஷ் முராரி ஆகியோர் ஒளிப்பதிவு செய்கின்றனர். இசை டூ பா டூ. இந்த படத்தின்  மிரட்டலான மோஷன் போஸ்டரை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் பொங்கல் திருநாளன்று வெளியிட்டது.

கார்ட்டூன் கேலரி