2600 திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் ‘காஞ்சனா 3’ …!

ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா’ சீரிஸ் ‘முனி’ யின் நான்காம் பாகமாக இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் ‘காஞ்சனா 3’ மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருக்கிறது. தமிழ்நாடு மட்டுமின்றி, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் வெளிநாடுகள் என மொத்தம் 2600 திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது .

பேய் படத்திலும் காமெடி ஒர்க் அவுட் ஆகும் என்பதை நிரூபித்து காட்டியதோடு, தமிழ் சினிமாவின் டிரெண்ட்டாகவும் மாற்றியுள்ளார் ராகவா லாரன்ஸ் .

இதில் ராகவா லாரன்ஸ், ஓவியா, வேதிகா, சத்யராஜ், கோவை சரளா, துவான் சிங், சூரி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்கி நடித்த லாரன்ஸ் தயாரிப்பிலும் கூட்டு சேர்ந்துள்ளார்.