ஏப்ரலில் வெளியாகிறது லாரன்சின் ‘காஞ்சனா-3’

ராகவா லாரன்ஸ் இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் ‘காஞ்சனா 3’ (முனி 4) படம் ஏப்ரல் மாதம் கோடை விடுமுறையின்போது வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

நடிகர் லாரன்ஸ் நிறுவனமான ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில்  தயாரிக்கப்பட்டு வரும் காஞ்சனா-3 என்ற படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கி  வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே முனி, காஞ்சனா என்று படங்களை எடுத்து வசூலை வாரி குவித்த லாரன்ஸ், தற்போது காஞ்சனா -3 என்ற படத்தை எடுத்து வருகிறார். இதில், அவருடன் வேதிகா மற்றும் ஓவியா ஆகிய இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர். மேலும், கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தின் இசைக்காக மதன் கார்க்கியின் ‘டூபாடூ’ நிறுவனத்துடன் லாரன்ஸ் இணைந்து இசை அமைத்து வருகிறார்.

இந்நிலையில், அடுத்த ஆண்டு (2019) ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள் ளது.  குழந்தைகளைக் குறிவைத்து ஏப்ரல் மாதம்கோடை விடுமுறையின்போது படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

You may have missed