காஞ்சிபுரம்

காஞ்சி சங்கர மடம் 850 அர்ச்சகர்களுக்கு ரூ.1000 நிதி உதவி வழங்கி உள்ளது.

கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  இதனால் பலர் பணி இழந்துள்ளனர். இதில் கோவில் அர்ச்சகர்களும் அடங்குவர்.  இந்து அறநிலையத் துறையின் கீழ் வராத கோவில் அர்ச்சகர்களுக்கு ஊதியம் கிடைக்காது.  பக்தர்கள் அளிக்கும் காணிக்கையைக் கொண்டே அவர்கள் வாழ்க்கை நடத்துகின்றனர்.

அத்தகைய அர்ச்சகர்களின் வாழ்வாதாரம் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.  அதையொட்டி காஞ்சி சங்கர மடத்தின் கீழ் இயங்கும் ஸ்ரீ பிரத்யாக்‌ஷா சாரிடபிள் டிரஸ்ட் சென்ற வாரம் 350 அர்ச்சகர்களுக்கு ரூ.1000 நிதி உதவி வழங்கியது.  இவர்கள் அனைவரும் கிராமம் மற்றும் குக்கிராம கோவில் அர்ச்சகர்கள் ஆவார்கள்.

தற்போது மேலும் 500 அர்ச்சகர்களுக்கு ரூ.1000 நிதி உதவி வழங்கபட் உள்ளது.  இந்த அரச்சகரக்ள் 850 பேரும் வட ஆற்காடு, தென் ஆற்காடு, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுச்சேரி, திருவாரூர், கும்பகோணம் நாகபட்டினம், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இந்த 850 அர்ச்சகர்களுக்கும் அடுத்த மாதமும் ரூ.1000 நிதி உதவி வழங்க டிரஸ்ட் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.