தமிழகத்தில் தீவிரமடையும் கொரோனா..! கோவையை தொடர்ந்து காஞ்சிபுரம் ஆட்சியருக்கும் பாதிப்பு

சென்னை: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

தமிழகத்தில் சாதாரண மக்களி மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கொரோனா தாக்கி வருகிறது. அரசியல் கட்சியினர், மருத்துவர்கள், திரையுலக பிரபலங்களையும் கொரோனா பாதித்து வருகிறது.

கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு கொரோனா பாதிப்பு இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு கோவை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந் நிலையில், காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.