காஞ்சிபுரம்: பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால்,  காஞ்சிபுரத்தில் 40 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில்  நிவர் புயல் கரை கடந்ததை அடுத்து, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளில் உள்ள பல ஏரிகள் நிரம்பி உள்ளன. இதன் காரணமாகவும், பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதாலும், பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால்,  காஞ்சிபுரம் மாவட்டத்தில்  40 கிராமங்களுக்கு  மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

கர்நாடகா மாநிலம் சிக்கபல்லபுரா மாவட்டத்தில் உள்ளள நந்தி மலையில் உருவாகும் பாலாறு அந்த மாநிலத்தில் 93 கிலோமீட்டர் தூரம் பயணித்து ஆந்திராவில் நுழைகிறது. ஆந்திராவில் 33 கிலோமீட்டர் தூரம் பயணித்து பின்னர் தமிழகத்தின் வாணியம்பாடி பகுதியில் நுழைகிறது. தமிழகத்தில் 222 கிலோமீட்டர் தூரம் பயணித்து செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பட்டினம் அருகே வயலூர் கிராமப்பகுதியில் கடலில் கலக்கிறது. பெயருக்கு ஏற்றபடி செழிப்பான பாலாறு. தமிழகத்திற்கு மட்டும் வரவே வறாது. ஏனெனில் ஆந்திராவில் ஏராளமான தடுப்பணைகள் காரணமாக வெள்ளம் வந்தால் வடிகாலாக மட்டுமே வரும்.

இப்பேர்பட்ட பாலாறு, ஆந்திர அரசின் தடுப்பணைகளால், பல ஆண்டுகளாக பாலாறு வறண்டுதான் காணப்படுகிறது. இந்த ஆண்டு தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை மற்றும் நிவர் புயல் காரணமாக பாலாற்றில் தண்ணீர் ஓடுகிறது. பூண்டி ஏரி நிரம்பி உள்ளதால், அங்கிருந்து  பாலாற்றில் 40 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் பாலாற்றில் பல ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது வெள்ளம் கரைபுரண்டுஓடுகிறது. இதன் காரணமாக,  ஆற்றின் கரையோரத்தில் உள்ள 40 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஆட்சியர் மகேஸ்வரி “காவேரிப்பாக்கம் தடுப்பணை திறக்கப்பட்டுள்ளதால் பாலாற்றின் கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வலியுறுத்தி உள்ளார். மேலும் கரையோர   40 கிராமங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டுகோள் விடுத்தும்,  வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

பொதுமக்கள் தங்குவதற்கு கிராம மக்கள் தங்கும் வகையில், பள்ளிக்கட்டிடங்கள் மற்றும் திருமண மண்டபங்கள், சமுதாயகூடங்கள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், தேவையான அடிப்படை வசதிகள் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.