சென்னை:

த்திவரதர் வைபத்தில் இன்ஸ்பெக்டரை ஆட்சியர் தரக்குறைவாக திட்டிய விவகாரம் குறித்து மனித உரிமை ஆணையம் தானாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறது.

இது தொடர்பாக ஆட்சியர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு  உள்ளது என்பது குறித்து தெரிவிக்கும்படி தமிழகஅரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

கடந்த வாரம்  அத்திவரதர் தரிசனத்தின் போது, விஐபிக்கள் செல்லும் வழியில் பொதுமக்களை அனுமதித்தாக கூறி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், இன்ஸ்பெக்டர் ஒருவரை பொதுமக்கள் முன்னிலையில், என்ன பித்தலாட்டம் பண்றதுக்கா இங்க வந்த?’ என்று கடுமையாக பேசியதுடன், உன்னை சஸ்பென்ட் பண்ணா தான் தெரியும். என்ன, போலீஸ்காரங்களாம் திமிரு தனம் பண்றீங்களா? என்று சரமாரியாக பொரிந்து தள்ளினர்.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில், மனித உரிமை ஆணையம் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.

காவல் ஆய்வாளரை தரக்குறைவாக திட்டிய  காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பி உள்ள மனித உரிமை ஆணையம், இது குறித்து இரண்டு வாரத்தில் பதில் தெரிவிக்கும்படி,  தமிழக தலைமைச் செயலாளர், காவல் துறை இயக்குனர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.