காஞ்சிபுரம்:

த்திவரதரை தரிசிக்க வந்த பக்தர்கள் முன்னிலையிலேயே, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டரை மரியாதை இல்லாமல் கடுமையாக பேசிய காஞ்சிபுரம் கலெக்டரின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது கலெக்டருக்கு எதிராக காவல்துறையினர் தரப்பில் இருந்து வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த வாரம்  அத்திவரதர் தரிசனத்தின் போது, விஐபிக்கள் செல்லும் வழியில் பொதுமக்களை அனுமதித்தாக கூறி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், இன்ஸ்பெக்டர் ஒருவரை பொதுமக்கள் முன்னிலையில் வைத்து ஒருமையில் கடுமையாக பேசிய  வீடியோ வைரலாகி சலசலப்பை ஏற்படுத்தியது.

அந்த வீடியோவில், எந்த ஸ்டேஷன் நீ?’ என்று கலெக்டர் கேள்விக் கேட்க, அதற்கு இன்ஸ்பெக்டர் மிகவும் தடுமாற்றத்துடன் பதில் சொல்ல, ‘அங்கிருந்து என்ன பித்தலாட்டம் பண்றதுக்கா இங்க வந்த?’ என்று கடுமையாக பேசியதுடன், உன்னை சஸ்பென்ட் பண்ணா தான் தெரியும். என்ன, போலீஸ்காரங்களாம் திமிரு தனம் பண்றீங்களா? என்று சரமாரியாக பொரிந்து தள்ளினர்.

இந்த நிலையில், சமீபத்தில்,  காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது குடும்பத்தினரை, எந்தவித  பாஸ் இல்லாமல், தனது அதிகார துஷ்பிரயோகத்தை பயன்படுத்தி விவிஐபி நுழைவு வாயில் வழியாக அழைத்துச் செல்லும் காட்சியை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.