கொரோனா பரவலை தடுக்க அதிரடி: காஞ்சிபுரத்தில் 42 வார்டுகள் 5 மண்டலங்களாக பிரிப்பு

காஞ்சிபுரம்: கொரோனா பரவலை தடுக்க காஞ்சிபுரத்தில் 42 வார்டுகள் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலேயே சென்னையில்தான் அதிகளவிலான நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 15 மண்டலங்கள் உள்ளன. அவற்றில் 2 மண்டலங்களில் மட்டும் கொரோனா பாதிப்பு இல்லை. அவை இரண்டும் தொழிற்பேட்டைகள் நிறைந்த மணலி, அம்பத்தூர் ஆகும்.

மற்ற மண்டலங்களான ராயபுரத்தில் 64 பேர், அண்ணாநகரில் 22 பேர், மாதவரத்தில் 3 பேர், திருவொற்றியூரில் 4 பேர், திருவிக நகரில் 28 பேர், பெருங்குடியில் 7 பேர், சோழிங்கநல்லூர், ஆலந்தூரில் தலா 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வளசரவாக்கத்தில் 5 பேர், அடையாறில் 7 பேர், தேனாம்பேட்டையில் 16 பேர், தண்டையார்பேட்டையில் 20 பேர், கோடம்பாக்கத்தில் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் சென்னையை போன்று கொரோனா பரவலை தடுக்க காஞ்சிபுரத்தில் 42 வார்டுகள் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கையை ஆட்சியர் மேற்கொண்டுள்ளார்.

அதன்படி, ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5 வண்ண அட்டைகள் அளிக்கப்படும்.  அத்யாவசிய தேவைகளுக்கு வாரத்தில் 2 நாட்கள் மட்டும் கடைக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.