காஞ்சிபுரம்: திமுக பிரமுகர் வெட்டிக் கொலை

காஞ்சிபுரம்:

சென்னையை  அடுத்த காஞ்சிபுரத்தில் சீனிவாசன்  என்பவர்  மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

காஞ்சிரம் அடுத்த அச்சிறுப்பாகம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். திமுகவை சேர்ந்த இவர் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி துணைத்தலைவராகவும் இருக்கிறார்.

இன்று காலை அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள தத்தாத்ரேயர் கோயிலுக்கு சாமி கும்பிட்டுவிட்டு  திரும்பி கொண்டிருந்த சீனிவாசனை மர்ம நபர்கள் கொடூரமாக வெட்டி கொலை செய்தனர். இந்த கொலை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போலீசார்   உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிரச்சினைகள் ஏதும் நிகழாதவாறு பாதுகாப்பு பணியில் உள்ளனர். மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.