சென்னை:
ந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில், தமிழ்க்கடவுள் முருகனுக்கு உகந்த கந்த சஷ்டி கவசம் குறித்து இழிவான பேசி விடியோ வெளியிட்ட, கறுப்பர் கூட்டம் அமைப்பின் சுரேந்திரன் மீது ஏற்கனவே குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில், தற்போது, மற்றொரு உறுப்பினர் செந்தில்வாசன் மீதும் குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.

கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் சார்பில், முருகனின் பதிகமான  கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்டது.  இது இந்து மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், ஆங்காங்கே போராட்டம் நடத்தப்பட்டது. மேலும்,  இதுகுறித்து ஏராளமானோர் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த விவகாரம் நாட்டின் மத ஒற்றுமைக்கு கேடு விளைக்கும் வகையில் இருந்ததால், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த  மத்தியக் குற்றப்பிரிவு போலீசார், கறுப்பர் கூட்டம் என்ற சேனல் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், இந்த அமைப்பைச் சேர்ந்த செந்தில்வாசன், சுரேந்திரன், சோமசுந்தரம், குகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த விவகாரத்தில் சுரேந்ததிரன் மீது ஏற்கனவே குண்டாஸ் சட்டம் போடப்பட்ட நிலையில், தற்போது செந்தில்வாசன் மீதும் குண்டம் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாநகர ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.