திருச்செந்தூர்: அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவில் ஜெயந்திநாதருக்கு தினசரி அபிசேகம், ஆராதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. வழக்கமாக  காலை, மாலை என இருமுறை கிரி பிரகார உலா நடைபெறும் நிலையில், இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கிரி பிரகார உலா நிகழ்வு ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இன்று காலை ஜெயந்திநாதருக்கு அபிசேக ஆராதனை மற்றும் விசேஷ பூசைகள் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

சஷ்டி திருவிழாவை முன்னிட்டு நாளை(15ம் தேதி) யாகசாலை பூஜையுடன்  தொங்கியது. இதையொட்டி அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், அதனை தொடர்ந்து தீபாராதனை நடைபெற்று வருகிறது.
கோயில் உள்பிரகாரத்தில் வள்ளி & தெய்வானை சன்னதிக்கிடையே உள்ள யாகசாலை மண்டபத்தில் காலை 6 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடக்கிறது. அங்கு சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி கும்பபூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து பூர்ணாகுதி தீபாராதனை ஆனதும் யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம் நடக்கிறது.
பகலில் மூலவருக்கு உச்சிகால தீபாராதனை ஆனதும் யாகசாலையில் மகா தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் தங்கசப்பரத்தில் எழுந்தருளி உட்பிரகாரத்தில் வலம் வந்து 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமி ஜெயந்திநாதருக்கு திபாராதனை நடக்கிறது. மாலையில் அதே இடத்தில் சுவாமி ஜெயந்தநாதருக்கு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடக்கிறது.
தொடர்ந்து மற்ற நாட்களில் அதிகாலை 3 மணிக்கு கோயில் நடைதிறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
இன்று மற்றும் நாளை நடைபெற இருக்கும் சூரசம்ஹாம் மற்றும் திருக்கல்யாண ஆகிய இருநாட்கள் விழாவை காண பக்தர்கள் அனுமதிஇல்லை.
மற்ற நாட்களில் தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் மட்டும் அதிகாலை 5 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும், பக்த்ரகள் கடல் மற்றும் நாழிகிணற்றில் நீராட அனுமதியில்லை. பக்தர்கள் தேங்காய், பழம், மாலைகள் மற்றும் பூஜை பொருட்கள் கொண்டு வர அனுமதியில்லை.
 காது குத்து அனுமதியில்லை. பக்தர்களுக்கு அன்னதானம் கோயில் மூலம் பொட்டலங்களாக வழங்கப்படும்.
திருவிழா நாட்களில் அனைத்து நிகழ்வுகளையும் வரும் 15ம் தேதி முதல் வரும் 19ம் தேதி வரை காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை யாகசாலை பூஜை மற்றும் மாலை 4 மணி முதல் மாலை 4.30 மணி வரை சுவாமி ஜெயந்திநாதர் அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை,
சூரசம்ஹாரம் நடக்கும் 20ம் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மதியம் 1.30 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கும் சுவாமி ஜெயந்திநாதர் அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை, மாலை 4.30 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்வு,
21ம் தேதி மாலை 6 மணிக்கு மாலை மாற்றுதல், இரவு 11 மணி திருக்கல்யாண நிகழ்ச்சி ஆகியவை கோயில் வலைதள நேரலையில் ஒளிப்பரப்பபடும்.
கோயிலுக்கு வரும் பக்தர்கள கட்டாயம் முக கவசம் அணிதிருக்க வேண்டும். ஆதார் அடையாள அட்டை நேரில் கொண்டுவர வேண்டும். பக்தர்கள் 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.