வேளாண் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநிலத்தில் பெரிய அளவில் போராட்டம் வெடித்து வருகிறது.

பிரதமர் மோடி தனது ட்விட்டரில், ”குறைந்தபட்ச கொள்முதலில் எந்த மாற்றமும் இருக்காது. அரசின் கொள்முதலும் தொடர்ந்து நீடிக்கும். எதிர்கால சந்ததிகளுக்கு பலன் அளிக்கும் வகையில் மாற்றங்கள் செய்து இருக்கிறோம்” என்று பதிவிட்டிருந்தார் .

இந்த நிலையில் பிரதமரின் ட்வீட்டை மேற்கோள் காட்டி, நடிகை கங்கனா தனது ட்விட்டர் பக்கத்தில், ”பிரதமரே தூங்கிக் கொண்டு இருப்பவர்களை எழுப்பி விடலாம். சிலரின் தவறான புரிதலை, அவர்களுக்கு விளக்கி புரிய வைக்கலாம். ஆனால், தூங்குவது போல் நடிப்பவர்களை என்ன செய்வது. இதே தீவிரவாதிகள்தான் சிஏஏ-வினால் யாரும் குடியுரிமையை இழக்காதபோது, ரத்தம் சிந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்” என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்தப் பதிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் சமூக வலைதளங்களில் பதிவாகி வருகிறது.