மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ்தாக்கரே ஒரு ‘நெபோடிசம்’ என பிரபல நடிகை கங்கனா ரனாவத் கடுமையாக சாடியுள்ளார். உத்தவ் தாக்கரே விமர்சனத்தை எதிர்த்து, அவர் நெபோடிசம் என பதிலடி கொடுத்துள்ளது மகாராஷ்டிராவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 {நெபோடிசம் (nepotism)  தகுதியாலன்றி, சொந்த பந்தங்கள் காரங்களுக்காக உயர் பதவிகள் கொடுத்தல்}

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு விசாரணை தொடர்பாக மும்பை போலீசாரையும், மராட்டிய அரசையும் பிரபல நடிகை கங்கனா ரணாவத் கடுமையாக விமர்சித்து வந்தார். மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசி இருந்தார்.  மேலும், பாலிவுட் நடிகர்களிடையே போதை பழக்கம்  இருப்பது குறித்தும் கடுமையாக சாடியிருந்தார்.

இதனால் கோபமடைந்த உத்தவ்தாக்கரே  அரசு கங்கனாவின் வீட்டின் ஒரு பகுதியை இடித்து, தனது அதிகாரத்தை காட்டியது.  தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில்,  சமீபத்தில் சிவசேனா தரப்பில் கொண்டாடப்பட்ட தசாரா பண்டிகை பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர்  உத்தவ் தாக்கரே ’’ சொந்த ஊரில் இருந்து வயிற்று பிழைப்புக்கு மும்பை வந்த சிலர் ( கங்கனா ரணாவத்) , இந்த நகரை ’’பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்’’ என வசை பாடுகின்றனர்.  பீகார் மகனின் ( சுஷாந்த்). தற்கொலைக்கு நீதி கேட்பவர்கள், மகாராஷ்டிர மகனின் நடத்தையை பழிக்கிறார்கள். ஏன்? என் மகன் ஆதித்யாவையும் களங்கப்படுத்துகின்றனர். நாங்கள் பரிசுத்தமானவர்கள். எங்கள் வீட்டில் துளசி வளர்க்கிறோம். கஞ்சா செடியை அல்ல. ஆனால் உங்கள், மாநிலத்தில் (இமாச்சலபிரதேசம்) தான் கஞ்சா தோட்டங்கள் உள்ளன.’’ என ஆவேசமாக கூறினார்.

உத்தவ் தாக்கரேவின் ஆவேசத்துக்கு நடிகை கங்கனா ரானாவத் மீண்டும் பதிலடி கொடுத்துள்ளார். “ உங்கள் மகன் வயதில் உள்ள பெண் மீதான கோபத்தால், முதல்-மந்திரியாக நீங்கள் ஒட்டு மொத்த மாநிலத்தின் மாியாதையையும் குறைக்க வைத்திருக்கிறீர்கள்.  உங்களை நினைத்து வெட்கப்படுகிறேன். நான் உங்களது மகன் வயது பெண் நான். சுயமாக முன்னேறிய ஒரு பெண் குறித்து இப்படிதான் பேசுவீர்களா?  நீங்கள் வாரிசு அரசியலின் மோசமான தயாரிப்பு, ஒரு நெபோடிசம் என  கடுமையா சாடியுள்ளார்.